முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. : லாரி மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      இந்தியா
MP 2024-08-20

Source: provided

போபால் : மத்திய பிரதேசத்தில் லாரி மீது ஆட்டோ மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர் 

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோ - ஜான்சி நெடுஞ்சாலையில் பாகேஷ்வர் நோக்கி ஆட்டோ ஒன்று நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 13 பேர் பயணம் செய்தனர். 

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்  பயங்கரமாக மோதியது. இந்த  விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து பற்றி தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் கூறுகையில், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 3 பேர் மேல் சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இறந்தவர்கள் ஆட்டோ டிரைவர் பிரேம் நாராயண், ஒரு வயது குழந்தை அஸ்மா, ஜனார்தன் யாதவ், மனு ஸ்ரீவஸ்தவா, கோவிந்த் ஸ்ரீவஸ்தவா, நன்னி புவா மற்றும் லாலு என அடையாளம் தெரியவந்துள்ளது என்று தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து