முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எதிரொலி: நேரடி பணிநியமன முறையை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : பிரதமர்  மோடியின் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்யுமாறு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய (யு.பி.எஸ்.சி) தலைவருக்கு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசுத் துறைகளில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது.

இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   ஆனால், அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளில் வல்லுனர்களை நேரடியாக நியமிக்கும் முறை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் உருவானது என்று பா.ஜ.க. சுட்டிக்காட்டி விளக்கம் அளித்தது.

எனினும், பரவலான விமர்சனங்களும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், அந்த முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. மத்திய அரசு பணியிடங்களில் நேரடி நியமன நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்யும்படி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு  மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதி உள்ளார். 

மத்திய அமைச்சர் தனது கடிதத்தில், கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்ட பெரும்பாலான பதவிகள் தற்காலிகமானவையே. இவற்றில் அனுகூலமானவை என்று சொல்லப்படும் விஷயங்கள் உட்பட எங்கள் அரசின் முயற்சிகள் அனைத்தும் நிறுவனங்களின் தேவையின் அடிப்படையிலானது. வெளிப்படையானது. 

நேரடி நியமன செயல்முறையானது அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள சமத்துவம், சமூக நீதி, அதிலும் குறிப்பாக இடஒதுக்கீடு விதிகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நமது பிரதமர் உறுதியாக நம்புகிறார். 

நேரடி நியமன முறை என்ற கருத்தாக்கம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டது. பின்பு கடந்த 2013-ம் ஆண்டு ஆறாவது ஊதியக் குழுவால் ஆதரிக்கப்பட்டது. அதன் செயல்முறை வரலாற்று ரீதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை கொண்டிருக்கவில்லை. 

பிரதமர் மோடியைப் பொறுத்தவரையில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது நமது சமூக அமைப்பில் ஒரு மூலக்கல் போன்றதாகும். அது வரலாற்று அநீதியை போக்குவதுடன் அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவிக்கிறது. 

சமூக நீதிக்கான அரசியலமைப்பு ஆணையை நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இதனால் விளிம்பு நிலைச் சமூகங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் அரசுப் பணிகளில் தங்களின் பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து