முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருவூல துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் கணக்கர் பணிக்கு தேர்வான 547 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      தமிழகம்
CM-1 2024-08-20

Source: provided

சென்னை : கருவூல கணக்குத்துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் கணக்கர் பணிக்கு தேர்வான 547 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கருவூலக் கணக்குத் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கணக்கர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 537 நபர்களுக்கும், கருவூலக் கணக்குத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, இதுநாள் வரை, கருவூலக் கணக்குத் துறையில் 16 கணக்கு அலுவலர், 118 இளநிலை உதவியாளர், 57 தட்டச்சர் மற்றும் ஒரு சுருக்கெழுத்து தட்டச்சர், என மொத்தம் 192 பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கணக்கர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 537 நபர்களுக்கும், கருவூலக் கணக்குத் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக முதல்வர் நேற்று 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

புதிதாக நியமனம் பெற்றுள்ள பணியாளர்களுக்கு சிறப்பாக பணிபுரியும் பொருட்டு முழுமையான பயிற்சிகள் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில்,  அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,  நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், நிதித்துறை செயலர் (செலவினம்) எஸ்.நாகராஜன்,  கருவூலக் கணக்கு ஆணையர் கிருஷ்ணனுன்னி,  கருவூலக் கணக்குத் துறை கூடுதல் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து