முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மருத்துவமனைகளுக்கு இ மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தீவிர விசாரணை

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      இந்தியா
Delhi 2024 08 03

Source: provided

புது டெல்லி : டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு நேற்று மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடு முழுவதும் சமீப நாட்களாக ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு நேற்று மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  மத்திய டெல்லியின் சாணக்யா பூரியில் உள்ள நங்லோயில் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து மதியம் 1.04 மணிக்கும், ப்ரைமஸ் மருத்துவமனையிலிருந்து மதியம் 1.07 மணிக்கும் போலீசாருக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத் துறையினர், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைகள் முழுவது தீவிர சோதனை நடத்தினர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து