முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரடி நியமன முறை ரத்து சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      தமிழகம்
CM-1 2024-03-10

Source: provided

சென்னை : மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் ரத்து சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று தெரவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் உயர்பதவிக்கான பணியிடங்களில் நேரடி நியமன நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்யும்படி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு மத்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதி உள்ளார். 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பணியிடங்களில் நேரடி நியமனத்தை கைவிட்டது சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டணியின் எதிர்ப்புக்கு பின் நேரடி நியமன ஆள்சேர்க்கையை மத்திய அரசு கைவிட்டுள்ளது. மத்திய பா.ஜனதா அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சிப்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் தன்னிச்சையான 50 சதவீத உச்சவரம்பு உடைக்கப்பட வேண்டும், மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து