முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் வரும் 20-ம் தேதி வரை நீட்டிப்பு

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      தமிழகம்
mahavishnu-2024-09-07

Source: provided

சென்னை: அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரை 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுளளது. 

பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு கடந்த வாரம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அவருடைய பேச்சு சமூகவலைதளங்களில் வெளியாகிய நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையில் மகாவிஷ்ணுவை போலீசார் திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சூழலில் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடந்து முடிந்தநிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் மகாவிஷ்ணுவை 20ம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து