முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜூன் டெண்டுல்கர் அசத்தல்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      விளையாட்டு
Arjun-Tendulkar 2024-03-17

Source: provided

டாக்டர் கே திம்மப்பையா நினைவு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதில் கர்நாடகா மற்றும் கோவா அணிகள் மோதின. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 26.3 ஓவர்களில் 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். முதல் இன்னிங்சில், கர்நாடகா 36.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் டெண்டுல்கர் 13 ஓவர்களில் 5/41 எடுத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கோவா அணியில் அபினவ் தேஜ்ரானா (109) சதம் அடிக்க கோவா 413 ரன்களை குவித்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய கர்நாடகா அணி 30.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் கோவா அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அர்ஜுன் 13.3 ஓவர்களில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அர்ஜூன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அர்ஜுன், இதுவரை சீனியர் மூன்று வடிவங்களில் 49 போட்டி ஆட்டங்களில் விளையாடி 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 13 முதல் தர ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

______________________________________________________________________

முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள்

வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய செஸ் வீரர்கள் அர்ஜுன் எரிகைசி மற்றும் குகேஷ் டி ஆகியோர் நேரடி செஸ் தரவரிசையில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றுள்ளனர். குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார். நேரடி செஸ் தரவரிசையில் இரண்டு இந்தியர்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

______________________________________________________________________

கவுண்டி தொடர்: ரகானே விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரகானே (வயது 36). இவர் இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். சமீப காலமாக மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக அவர், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.

இதில் ஒருநாள் தொடரில் அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய லிசெஸ்டர்ஷையர் அணியானது, அரையிறுதியில் சொமர்செட் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது. இருப்பினும் ஒருநாள் தொடருக்கு பிறகு கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டில் லிசெஸ்டர்ஷையர் அணிக்காக ரகானே விளையாடி வந்தார். இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு சீசன் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ரகானே விலகியுள்ளதாக லிசெஸ்டர்ஷைர் அணி அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

______________________________________________________________________

காம்பீரின் ஐ.பி.எல். கனவு அணி

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் காம்பீர்ஐ.பி.எல். தொடரில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்களை வைத்து சிறந்த ஐ.பி.எல். கனவு லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். 

அதில் தொடக்க ஆட்டக்காரராக கொல்கத்தா அணியில் தன்னுடன் இணைந்து விளையாடிய ராபின் உத்தப்பாவை தேர்ந்தெடுத்துள்ளார். காம்பீர்தேர்வு செய்த அணியில் 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காம்பீர்தேர்வு செய்த சிறந்த ஐ.பி.எல். கனவு 11 அணி பின்வருமாறு.,  கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, சூர்யகுமார் யாதவ், ஜாக் காலிஸ், யூசுப் பதான், ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, டேனியல் வெட்டோரி மற்றும் மோர்னே மோர்கல்.

______________________________________________________________________

நாதன் லயன் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்தால் விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற இந்திய பேட்ஸ்மேன்களை தங்களால் வீழ்த்த முடியும் என அந்நாட்டின் ஸ்பின்னர் நாதன் லயன் கூறியுள்ளார். மேலும் இம்முறை இந்தியாவை 5 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- ஜெய்ஸ்வால் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பற்றி இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லியிடம் பேசி கேட்டறிந்தேன். மிடில் ஆர்டரில் சர்பராஸ் அல்லது ராகுல் வருவாரா என்பது தெரியவில்லை. இந்தியா முழுவதும் சூப்பர்ஸ்டார்களை கொண்ட வீரர்களாகும். விராட் கோலி அங்கே இருப்பார். ரிஷப் பண்ட் வங்காளதேச தொடரில் விளையாட உள்ளார். எனவே அந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் பெரிதாகி வருகிறது. அதனால் டெஸ்ட் போட்டிகள் இறப்பதாக மக்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாங்கள் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்களாகி விட்டது. அதைப்பற்றி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போதே நான் சிந்திக்கத் தொடங்கினேன். எனது கண்களை நீண்ட காலமாக வைத்துள்ளேன். இம்முறை ஆஸ்திரேலியா 5 - 0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று நான் கணிக்கிறேன்" என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து