முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்டில் 6 வந்தே பாரத் புதிய ரெயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      இந்தியா
Vande-Bharat-Start-up 2023-05-25

Source: provided

ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்திற்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி  ராஞ்சியில்  6 புதிய வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.

டாடாநகர் - பாட்னா, பிரம்மபூர் - டாடாநகர், ரூர்கேலா - அவுரா, தியோகர் - வாரணாசி, பாகல்பூர் - அவுரா, கயா - அவுரா ஆகிய 6 புதிய வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. அங்குள்ள டாடாநகரில் இருந்து பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் அங்கு செல்ல முடியவில்லை. 

இதை தொடர்ந்து ராஞ்சியில் இருந்து காணொலி வாயிலாக 6 புதிய வந்தே பாரத் ரெயில்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி ரூ. 660 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் 32 ஆயிரம் பயனாளிகளுக்கு அனுப்பி கடிதங்கள் வழங்கினார். மேலும் வீடுகள் கட்டுவதற்கு முதல் தவணையாக ரூ.32 கோடியை விடுவித்தார். 

இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

ஜார்கண்ட் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. ஆனால் தற்போது பல திட்டங்களால் இங்கு முன்னேற்றம் காண முடிகிறது. பழங்குடியினர், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், தலித்துகள் ஆகியோரின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

கிழக்கு இந்தியாவில் ரெயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியமும் வளர்ச்சி அடையும். ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரெயில்வே மேம்பாட்டுக்கான பட்ஜெட் ரூ. 7000 கோடி ஆகும். இதை 10 ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இது 16 மடங்கு அதிகம்.

ரெயில்வே இணைப்பு நெட்வொர்க்கில் 100 சதவீதம் மின்மயமாக்கல் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும். 50-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு மோடி பேசினார்.

இதை தொடர்ந்து பிரதமர் மோடி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து ஜாம்ஷெட்பூருக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து