முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கு சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம்: உஷா வான்ஸ்க்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      இந்தியா
Usha-Vance-Chandrababu-2024

அமராவதி, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் தெலுங்கு பாரம்பரிய பெண் என்ற வரலாற்று தருணத்துக்கு வழிவகுத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தெலுங்கு சமூகத்தினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் இது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், அவரது கட்சியை சேர்ந்த ஜே.டி.வான்ஸ், துணை அதிபராகிறார். அவர் வருகிற ஜனவரி 20-ம் தேதி டிரம்புடன் பதவி ஏற்கவுள்ளார்.  

ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். அதுவும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவரது சொந்த கிராமமான வத்லுரு, மிகவும் பிரசித்தி பெற்ற கோதாவரி நகரமான தனுகு, மேற்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகரான பீமாவரத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

உஷாவின் தந்தை ராதாகிருஷ்ணன், சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.டெக் படித்தவர். தாய் லட்சுமி. உஷாவின் தாத்தா ராம சாஸ்திரி சென்னை ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறையின் முதல் உயர் அதிகாரியாக பணியாற்றியவர்.

 உஷா தனது குடும்பத்துடன் சில காலம் சென்னையில் வசித்து வந்தார். பின்னர் அவரது குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. அங்கு பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்தபோது ஜே.டி.வான்சுடன் பழக்கம் ஏற்பட்டது. 

அது காதலாக மாறியது. பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஜே.டி.வான்சின் பல வெற்றிகளுக்கு உஷா துணையாக நின்றுள்ளார். இந்த தேர்தலிலும் அவர் உறுதுணையாக இருந்தார். 

இந்தியாவை சேர்ந்த பெண்ணான உஷா, தற்போது அமெரிக்காவின் பெருமைக்குரிய 2-வது பெண்மணி என்ற அந்தஸ்தை பெறப்போகிறார். இதை இந்தியாவில் உள்ள அவரது உறவினர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் வெற்றி பெற்றிருப்பதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 

அமெரிக்காவின் துணை அதிபராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்சுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இந்த வெற்றி, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் தெலுங்கு பாரம்பரிய பெண் என்ற வரலாற்று தருணத்துக்கு வழிவகுத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள தெலுங்கு சமூகத்தினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் இது. ஜே.டி.வான்ஸ் - உஷா வான்சை ஆந்திராவுக்கு வருமாறு அழைக்கும் வாய்ப்பினை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இவ்வாறு அந்த பதிவில் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து