முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடுகள் தோறும் அத்தப்பூ கோலம்: கேரளாவில் களைகட்டியது ஓணம் கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      இந்தியா
Kerala-Onam 2024-09-15

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் ஓணம் பண்டிகையின் 10-வது நாளான நேற்று சிகர நிகழ்வான திருவோண கொண்டாட்டம் வீடுகள் தோறும் அத்தப்பூ கோலமிட்டு  பண்டிகை களைகட்டி காணப்பட்டது.  

கேரள மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை ஓணம். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இந்த பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் அத்தப்பூ என்ற பூக்கோலம் ஆகும். இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 6-ம் தேதி தொடங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை தினமும் கொண்டாடி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. 

10-வது நாளான நேற்று சிகர நிகழ்வான திருவோண கொண்டாட்டம் நடைபெற்றது. மலையாள மக்கள் பழைய பாரம்பரியத்துடன் இப்பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்காக வீடுகள் தோறும் அத்தப்பூ கோலம் வரைந்து, ஓணம் பண்டிகைக்கு அழகு சேர்த்துள்ளனர். ஓணம் சத்யா விருந்து படைத்தனர். 

கேரள மாநிலம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். வீடுகள் மட்டுமின்றி பொது இடங்கள் மற்றும் கோவில்களில் மிக பிரம்மாண்டமான அளவில் அத்தப்பூ கோலம் வரையப்பட்டிருப்பது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். 

ஓணத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மக்கள் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நேற்று ஓணம் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து