முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீதாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      இந்தியா
CM-1 2024-09-15

Source: provided

புதுடெல்லி : சீதாராம் யெச்சூரியின் உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நிமோனியா போன்ற மார்புத் தொற்று சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும், அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கும் மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தானமாக அளிக்கப்பட்ட சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் மறைந்த பின்னும் தன்னுடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைத்துவிட்ட சீதாராம் யெச்சூரியின் புகழ் எப்போதும் போற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் உரிமைகளுக்காக முழங்கிய தோழர் சீதாராம் யெச்சூரிக்குப் புகழ்வணக்கம். செவ்வணக்கம். மறைந்த பின்னும் தன்னுடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைத்து விட்ட அவரது புகழ் - அவரது மக்கள் தொண்டைப் போல் எப்போதும் போற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.  முன்னதாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சென்று அங்கு சீதாராம் யெச்சூரியின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து