முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      தமிழகம்
Okenakkal 2023-08-17 - Copy

மேட்டூர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 3 நாட்களுக்கு முன் மாலை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், ஒகேனக்கல்லில் அருவிகள் மற்றும் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் வினாடிக்கு 13,217 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 14,629 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.19 அடியாகவும், நீர் இருப்பு 80.11 டிஎம்சியாகவும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து