முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      இந்தியா
Trainaccident-2024-09-19

மதுரா, உத்தரபிரதேசத்தில் நிலக்கரிகளை ஏற்றி கொண்டு சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன. 

உத்தர பிரதேசத்தில் பிருந்தாவன் பகுதி அருகே நிலக்கரிகளை ஏற்றி கொண்டு சூரத்கார் மின்சார ஆலைக்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு ரயில் திடீரென விபத்தில் சிக்கியது. 

ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன. இதனை ஆக்ரா பிரிவுக்கான மண்டல ரயில்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் அகர்வால் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், இந்த வழியில் செல்ல கூடிய 3 ரயில்வே வழிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் தகவலறிந்து சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. 

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. ரயில் தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து மேற்கொள்வதற்கான சீரமைப்பு பணிகளில் ரயில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து