முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: மன்னிப்பு கோரிய டிடி தமிழ் தொலைக்காட்சி

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      தமிழகம்
DD-Tamil-logo

சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என்று டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள துர்தர்ஷன் (டிடி) தமிழ் தொலைக்காட்சியில் நேற்று இந்தி தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், "தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி இடம் பெறவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிடி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. அசாதாரண சூழலை ஏற்படுத்தியதற்காக கவர்னரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து