முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில முறைகேடு விவகாரம்: இன்று லோக் ஆயுக்தா விசாரணைக்கு ஆஜராவேன்: சித்தராமையா

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      இந்தியா
Siddaramaiah 2023 04 16

மைசூரு, லோக் ஆயுக்தா விசாரணைக்கு இன்று காலை ஆஜராவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார் ",

கர்நாடகத்தில் சித்தராமையா (76) தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர்  சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

முடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும்  இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அம்மாநில கவர்னரிடம் மனு அளித்தனர். 

இந்த விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு, விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது.

இந்த வழக்கை லோக் அயுக்தா போலீஸ் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே முடா நிலமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்று 6-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கர்நாடக முதல்வர்  சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீஸ் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், லோக் ஆயுக்தாவின் நோட்டீசை ஏற்று, இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகவுள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த மாதம் 25-ம் தேதி சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இப்போது அம்மாநில முதல்வருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து