முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை, மராட்டிய மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      இந்தியா
DGP 2024-11-05

மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. 

தேர்தலில் பா.ஜனதா - காங்கிரஸ், சிவசேனா - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சிகள் நேரடியாக மோதும் தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. 

மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க.வும், மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரசும் அதிக தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அந்த வகையில் மொத்தம் உள்ள 288 இடங்களில் இந்த 2 கட்சிகளும் 74 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் புகார்களைத் தொடர்ந்து அம்மாநில டி.ஜி.பி. ரஷ்மி சுக்லாவை உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அம்மாநில அரசுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் குமார் வர்மா நியமிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.  சஞ்சய் குமார் வர்மா 1990-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ச்சை சேர்ந்தவர் ஆவார். இவர் சட்டம் மற்றும் தொழில்நுட்பத்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தவராவார். மேலும் இவர் ஏப்ரல் 2028-ல் ஓய்வு பெற உள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து