முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத் பூஜை: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      இந்தியா
Modi 2024-01-17

புது டெல்லி, சாத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் இந்து பண்டிகையாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 4 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இந்த நாட்களில் பொதுமக்கள் நீர்நிலைகளில் நின்று சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம். இந்த நாட்களில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது மக்கள் வழிபடுவார்கள். 

பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் மிகுந்த உற்சாகத்துடன் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான சாத் பூஜை நேற்று நஹாய்-காய் சடங்குடன் தொடங்கியது. 

இந்நிலையில், சாத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

சாத் என்ற மாபெரும் திருவிழாவில்  நஹாய்-காயின் புனித நிகழ்வில் அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். விரதம் இருக்கும் அனைவருக்கும் எனது சிறப்பு வணக்கங்கள். சாத்தி மையாவின் ஆசிர்வாதத்துடன் உங்கள் சடங்குகள் வெற்றிகரமாக நிறைவேற வேண்டுகிறேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து