முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணி தொடரும்: திருமாவளவன் திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      தமிழகம்
Thirumavalavan 2023 07 30

Source: provided

திருச்சி : மதச்சார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி. எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை வி.சி.க.வுக்கு இல்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி தொடரும். கூட்டணி தொடர்பாக இனி பேச வேண்டாம் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அங்கிருந்து அவர் அரியலூர் மாவட்டம் புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: 

கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கெனவே நாங்கள் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறோம். அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம். இரண்டு கூட்டணிகளை உருவாக்கியதிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பங்கு உண்டு.

நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும். முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தான் என்னுடைய கவனம் இருக்கிறது. இந்தக் கூட்டணிகளை விட்டு விட்டு இன்னொரு கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. ஏற்கெனவே பலமுறை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். 

திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மையற்ற நிலையை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.  நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் மதச்சார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி. 

எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை வி.சி.க.வுக்கு இல்லை. 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி தொடரும். கூட்டணி தொடர்பாக இனி கேட்க வேண்டாம்  என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து