முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாவட்ட மக்களின் அன்பை கண்டு நெகிழ்ந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      தமிழகம்
CM 2024-05-31

சென்னை, கள ஆய்வுப்பணியை கோவையில் இருந்து தொடங்கிய நிலையில், கோவை மக்களின் அன்பை கண்டு நெகிழ்ந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார். இந்த கள ஆய்வுப்பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று கோவையில் இருந்து தொடங்கினார்.

முன்னதாக நேற்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தந்தார். அவருக்கு, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து விளாங்குறிச்சி வரை சுமார் 4 கி.மீ தூரம் பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர்.

11:30 மணிக்கு பீளமேடு - விளாங்குறிச்சி சாலையில், 'எல்காட்' நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில், 3.94 ஏக்கர் பரப்பளவில், 114.16 கோடி ரூபாயில், எட்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கபட்ட நில உரிமையாளர்களுக்கு நில விடுவிப்பு உத்தரவை வழங்கினார்.

இந்தநிலையில், கோவை மக்கள் வரவேற்பு அளித்தது குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது.,  "நல்லா இருக்கீங்களா தலைவரே…" எனக் கோவை விமான நிலையம் முதல் எல்காட் வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு! 4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணிநேரம் ஆனது! கோவை மக்களின் அன்பை கண்டு நெகிழ்ந்தேன் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து