முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ்: ஜோகோவிச் விலகல்

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      விளையாட்டு
Jokovic 2023-09-06

Source: provided

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வருகிற 10-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், காயம் காரணமாக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜோகோவிச் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால், காயம் காரணமாக தற்போது என்னால் அதில் பங்கேற்க முடியவில்லை. என்னை அந்தப் போட்டியில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியில் பங்கேற்கும் இதர வீரர்களுக்கு வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.

_____________________________________________________________________________________

ஆஸி., அணிக்கு புதிய கேப்டன் 

கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டி20 அணியை கேப்டன் பெயரில்லாமல் அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக மிட்செல் மார்ஷ் டி20 அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில், 29 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்டரான ஜோஷ் இங்லிஷ் புதிய டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20க்கு மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இங்லிஷ் கேப்டனாக செயல்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது. பார்டர்- கவாஸ்கர் கோப்பை தயாரிப்புக்காக பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் 3ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடட்டார்கள் என்பதால் இங்லிஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  மிட்செல் மார்ஷ், டிராவிஷ் ஹெட் தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிட இருப்பதால் டி20 கேப்டனாக இந்தத் தொடருக்கு மட்டும் இங்லிஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் 14ஆவது டி20 கேப்டனாகவும் 30ஆவது ஒருநாள் கேப்டனாகவும் இங்லிஷ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் தேசிய அணித் தலைவர் ஜார்ஜ் பெய்லி, “ஜோஷ் இங்லிஷ் ஒருநாள், டி20 அணியில் விளையாடுபவர். களத்திலும் களத்துக்கு வெளியேவும் மிகவும் மதிக்கத்தக்க வீரராக இருக்கிறார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா ஏ அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். ஷார்ட், ஜாம்பா, மேக்ஸ்வெல், ஸ்டாயினிஸிடமிருந்து இவருக்கு நல்ல ஆதரவும் கிடைத்துள்ளது. மூத்த வீரர்களுக்கு பதிலாக 3ஆவது ஒருநாள் போட்டியில் சேவியர் பார்ட்லெட், ஸ்பென்சர் ஜான்சன், ஜோஷ் பிலிப் அணியில் இணைந்துள்ளார்கள்” எனக் கூறினார். முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. முதல் டி20 தொடர் நவ.14ஆம் தேதி தொடங்குகிறது.

_____________________________________________________________________________________

ஏலம்: பென் ஸ்டோக்ஸ் விலகல்

ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் மெகா ஏலம் நடைபெறும். அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.

இந்நிலையில், ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார் . ஏலத்தில் 1,574 வீரர்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம்பெறவில்லை. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2023-ம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் விளையாடினார். ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்ற புதிய விதி உள்ளது. இதனால் பென் ஸ்டோக்ஸ் இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாட முடியாது.

_____________________________________________________________________________________

ஐ.பி.எல். ஏலத்தில் ஆண்டர்சன்

ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் மெகா ஏலம் நடைபெறும்.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ. 1.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டியில் கடைசியாக 2014ம் ஆண்டு ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

_____________________________________________________________________________________

ரோகித் சர்மா குறித்து ஸ்ரீகாந்த் 

ரோகித் சர்மாவின் கேப்டன்சி எதிர்மறையாக, தற்காப்பு உத்தியுடன் இருக்கிறது, அட்டாக்கிங் ஆக இல்லை என்ற விமர்சனங்களை வர்ணனையில் ரவி சாஸ்திரி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கவாஸ்கர் உள்ளிட்டோர் வைத்தனர். பேட்டிங்கில் ‘லேசி எலிகன்ஸ்’ என்று கூறப்படும் ரோகித் சர்மா அலட்சியமாக ஆட்டமிழந்து இந்திய அணியை 3-0 என்ற முற்றொழிப்பு தோல்விக்கு இட்டுச் சென்றது ரசிகர்கள் மத்தியில் கடும் ஆவேசங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும்போது, “முன்னோக்கிச் சிந்திக்க வேண்டும். ரோகித் சர்மா நன்றாக ஆடவில்லை எனில் அவர் ஓய்வு பெறுவது நல்லது. அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆடுவார். 

ரோகித் சர்மாவுக்கு வயதாகி வருகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆனால் தான் தொடர் முழுதும் மோசமாக ஆடியதாகவும் மோசமாக கேப்டன்சி செய்ததாகவும் ரோகித் சர்மாவே ஒப்புக்கொண்டதற்காக அவருக்கு ஹேட்ஸ்-ஆஃப். இப்படி ஒப்புக்கொள்ளுதல்தான் ஒரு வீரர் தன்னுடைய ரிதமுக்குத் திரும்புவதன் முதல் படி.  நம் தவறுகளை ஒப்புக் கொள்வது முக்கியமானது. மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு குணம் ஆகும் அது. ரோகித் சர்மா வெளிப்படையாக தன் குறைகளை ஒப்புக் கொண்டுள்ளார். இது அவர் தன்னை மீட்டெடுப்பதற்கான பாதையில் செல்லப் போகிறார் என்று அர்த்தம். இது என்னுடைய கருத்து.” இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து