முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

தஞ்சை, தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி உள்ளனர். அதற்கு  தமிழக மக்களே  தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

 தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:-

 ஒருகாலத்தில் பெண்கள் வெளியில் வருவது இல்லை. ஆனால் தற்போது ஏராளமான பெண்கள் திருமண வீட்டிற்கு வந்துள்ளார்கள். இதற்கு காரணம் நம் திராவிடம் தான். பெண் அடிமைத்தனத்தை ஒழித்தவர் பெரியார். மகளிர் வளர்ச்சி தான் மாநில வளர்ச்சி என்பார் முதல்வர் ஸ்டாலின்.

அதற்கு ஏற்றார் போலத்தான் பல திட்ட்டங்களை கொண்டு வந்துள்ளார். தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி உள்ளனர். அதற்கு பதில் சொல்ல தேவையில்லை. தமிழக மக்களே அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.  தி.மு.க. கூட்டணியில் விரிசல் விழாதா என பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் எதிர்பார்க்கிறார்கள்.  

தி.மு.க. தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது.  நம்முடைய தொடர் வெற்றிதான் எதிரணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. 2026-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைத்து 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். 

அதற்காக நாம் உழைக்க வேண்டும். வரவுள்ள சட்டமன்ற தேர்தலில்  நமது இலக்கு 200 தொகுதி வரவேண்டும் என்பது. அதற்கு ஏற்றார் போல் அனைவரும் செயல்பட வெண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து