முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமானுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
Vijay 2023-12-30

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடினார்.  சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சியினர் நேற்று காலையில் இருந்தே  வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில்,   தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கடந்த சில தினங்களுக்கு முன்பாக சீமான் கடுமையாக விமர்சித்து இருந்தார்.   சீமானின்  விமர்சனத்திற்கு விஜய் தரப்பில் இருந்து பதிலடி எதுவும் வரவில்லை. அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்திலும், யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம் எனவும் ஆதாரப்பூர்வமாக பதில் விமர்சனங்களை முன்வைக்குமாறு விஜய், நிர்வாகிகளை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து