முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடைபெற்று வரும் போர்களால் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்: ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2024      உலகம்
Modi-1 2024-09-14

பிரேசிலா, நடைபெற்று வரும் போர்களால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பிரேசில் வகித்து வருகிறது. இதனிடையே, ஜி20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டின் டியோடி ஜெனிரோ நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த உச்சிமாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். சமூக உள்ளடக்கம் மற்றும் பட்டினி, வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் நடப்பு ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது.

இந்நிலையில் ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, போரால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, உலகில் நடைபெற்றுவரும் போர்களால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தெற்கு நாடுகளுக்கு முக்கியத்துவம் அந்நாடுகள் சந்திக்கும் சவால்களை மனதில் வைத்து செயல்பட்டால் மட்டுமே நமது ஆலோசனைகள் வெற்றிபெறும்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து