முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியின் முன்னாள் அமைச்சர் கைலாஷ் பா.ஜ.க.வில் இணைந்தார்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      இந்தியா      அரசியல்
Kailash-Gehlot 2024-11-18

புதுடெல்லி, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ராஜிநாமா செய்த டெல்லியின் முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் திங்கள்கிழமை பா.ஜ.க.வில் இணைந்தார்.

மத்திய அமைச்சர்கள் மனோகர் லால் கட்டார் மற்றும் ஹர்ஷ் மல்ஹோத்ரா, டெல்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் தேசிய ஊடகத் தலைவர் அனில் பலுனி உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் பா.ஜ.க.வின் தலைமையகத்தில் இணைந்தார்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான கைலாஷ் கெலாட் தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பிவைத்தார். கடிதத்தில் கெலாட் கூறியது..

கட்சி எதிர்கொள்ளும் சமீபத்திய சர்ச்சைகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் பதிலாக, ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த கொள்கைக்காகப் போராடுவதில் மும்முரமாக உள்ளதாக குற்றஞ்சாட்டினார். நஜாஃப்கர் சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வான கைலாஷ் கெலாட்டின் ராஜிநாமாவை டெல்லி முதல்வர் அதிஷி ஏற்றுக்கொண்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

கைலாஷ் கெலாட்டின் ராஜிநாமாவை டெல்லி பா.ஜ.க. வரவேற்றுள்ளது. இது தொடர்பாக டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா, கைலாஷ் கெலாட் துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். ‘கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ.க. எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய அதே பிரச்னைகளை எழுப்பி கைலாஷ் கெலாட் பதவி விலகியுள்ளார். ஆம் ஆத்மி தலைவர்கள் கூட கெஜ்ரிவாலை நேர்மையான அரசியல்வாதியாக கருதவில்லை என்பதை அவரது ராஜிநாமா நிரூபிக்கிறது. இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், வழக்குரைஞராகவும் இருந்த கெலாட் நல்ல பணிகளுக்கு பெயர் பெற்ற தலைவர் என்று சச்தேவா கூறினார்.

கெலாட்டின் இணைவை தேசிய தலைநகர் அரசியலில் ஒரு திருப்புமுனை என்று கட்டார் கூறினார். ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கெலாட் கட்சியில் சேர்க்கப்படுவது அதன் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று பா.ஜ.க. நம்புகிறது. டெல்லி பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கெலாட்டின் விலகல் ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து