முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்து வீரர் வீரருக்கு தடை

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      விளையாட்டு
New-Zealand 2024-11-18

Source: provided

நியூசிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டக் பிரெஸ்வேல் (வயது 34) இந்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூர் போட்டியில் விளையாடியபோது கோகைன் போதைப்பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை எந்த வித கிரிக்கெட் போட்டியும் விளையாட முடியாத வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. முதலில் இவருக்கு 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து விளையாட்டு நேர்மை ஆணையம் தீர்ப்பு வழங்கியது. எனினும் இவர் போட்டி தொடங்குவதற்கு முன்பே கோகைன் உட்கொண்டது தெரிந்ததால் தண்டனை காலத்தை ஒரு மாதமாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. இவரது இடைநீக்கம் ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கியது. இதன் விளைவாக, பந்து வீச்சாளர் ஏற்கனவே தனது தடை காலத்தை அனுபவித்துவிட்டார், இதனால் அவர் எந்த நேரத்திலும் கிரிக்கெட்டை மீண்டும் தொடங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

____________________________________________________________________________________________

ஜூரல் விளையாட அறிவுறுத்தல் 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் வேண்டும் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது., அவரால் சிறந்த பேட்ஸ்மேனாக எளிதாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். எதிர்புறம் விக்கெட்டுகள் இழந்து அணி தடுமாறியபோது அவர் இங்கே மிகவும் பொறுமையுடன் அழுத்தமான சூழலில் தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அது என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் அழுத்தத்தின் கீழ் நிறைய வீரர்கள் தடுமாறியதை நீங்கள் பார்த்தீர்கள். அழுத்தத்தின் கீழ் அந்த வீரர்கள் பதற்றமாக விளையாடியதையும் நீங்கள் பார்த்தீர்கள்.

ஆனால் இந்த பையன் அது போன்ற சமயங்களில் மிகவும் பொறுமையுடன் பதறாமல் நின்றார். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் கூட விக்கெட்டுகள் விழுந்தபோது அவர் நிதானமாக விளையாடி அசத்தினார். அந்த வகையில் இங்கே விளையாடுவதற்கு அவர் நல்ல முறையில் தயாராக இருப்பதாக நான் பார்க்கிறேன். அப்படி இருந்தால் நீங்கள் அவருக்கு தாராளமாக வாய்ப்பு கொடுக்கலாம். இங்கே 80, 60 ரன்கள் அடித்தது அவருக்கு சிறப்பாக விளையாடுவதற்கான நல்ல தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும். நல்ல பார்மில் இருக்கும் அவர் பந்தை தடுத்து நிறுத்துபவர் மட்டுமல்ல. நல்ல ஷாட்டுகளை வைத்துள்ளார். பின்வரிசை வீரர்களுடனும் அவரால் பேட்டிங் செய்ய முடியும் என்பது முக்கியமாகும். அப்படித்தான் இந்தியா தங்களுடைய சமநிலையை சரி செய்ய பார்க்க வேண்டும்" என்று கூறினார்.

____________________________________________________________________________________________

மும்பை அணி அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான (20 ஓவர்) சையத் முஷ்டாக் அலி கோப்பையின் 17-வது சீசன் வரும் 23-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள 38 அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அணி 'குரூப் பி' -ல் இடம்பெற்றுள்ளது. இந்த தொடருக்கான தமிழக அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. தமிழக அணிக்கு ஷாருக்கான் கேப்டனாகவும், துணை கேப்டனாக சாய் சுதர்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கான மும்பை அணி குரூப் - இ யில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அஜிங்க்ய ரகானே, பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், சித்தேஷ் லாட் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மும்பை அணி விவரம்; ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரித்வி ஷா, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஜெய் பிஸ்டா, அஜிங்க்ய ரகானே, சித்தேஷ் லாட், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சாய்ராஜ் பாட்டீல், ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஷம்ஸ் முலானி, ஹிமான்சு சிங், தனுஷ் கோட்யான், ஷர்துல் தாக்கூர், மொஹித் அவஸ்தி, ராய்ஸ்டன் டயஸ், ஜூன்ட் கான்

____________________________________________________________________________________________

ஆஸி. பயிற்சியாளர் முடிவு

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, சௌதி அரேபியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மிக முக்கியமான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டேனியல் வெட்டோரி ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்பதற்காக சௌதி அரேபியா செல்லவிருக்கிறார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி சிறப்பாக செயல்படுவதற்கு நாங்கள் மிகுந்த ஆதரவாக இருக்கிறோம். ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள புறப்படும் முன்பாக பெர்த் டெஸ்ட் போட்டிக்கு தேவையான பயிற்சியினை அவர் அணிக்கு அளித்துவிடுவார். ஐபிஎல் மெகா ஏலம் முடிந்தவுடன் மீண்டும் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து, பார்டர் - கவாஸ்கர் தொடர் முழுவதும் பயிற்சியளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெர்த் டெஸ்ட் போட்டியில் டேனியல் வெட்டோரிக்குப் பதிலாக அந்த இடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய பயிற்சியாளர் லாச்லன் ஸ்டீவன்ஸ் தற்காலிகமாக அணியின் பயிற்சியாளராக செயல்படுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து