முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 23-ம் தேதி வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2024      தமிழகம்
Puyal

சென்னை, வங்கக்கடலில் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி வரும் பட்சத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்து வரும் 2-3 நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், பருவமழை தீவிரம் அடையவில்லை. இந்த மாதம் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி பருவமழை தீவிரம் அடையும் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுவதிலேயே தாமதம் ஆனது. 3 முறை தள்ளிப்போய், கடந்த 11-ந்தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், வங்கக்கடலில் வரும் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இது மேலும் தீவிரமடைந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி வரும் பட்சத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 2-3 நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து