முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலேயே முதல்முறையாக கொல்லத்தில் டிஜிட்டல் நீதிமன்றம் தொடங்கியது

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      இந்தியா
Digital-Court 2024 11 20

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாகி வருகிறது. நீதிமன்றங்களிலும் இ பைலிங் உள்பட பல சேவைகள் நவீனமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. 

 இங்கு ஜாமீன் எடுப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவரோ, ஜாமீன்தாரரோ இந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை. அதற்குரிய ஆவணங்களை ஆன்லைனில் தாக்கல் செய்தாலே போதுமானதாகும்.

இந்த நீதிமன்றத்தில் மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராகலாம். காணொலி மூலமாகவே நீதிமன்றத்தின் எல்லா நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்யலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான சம்மன்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு ஆன்லைன் மூலமாகவே அனுப்பப்படும். நீதிமன்ற கட்டணங்களை இ பேமென்ட் மூலம் கட்டலாம். இந்த நீதிமன்றத்தில் ஒரு மாஜிஸ்திரேட்டும், மூன்று ஊழியர்களும் இருப்பார்கள். கம்ப்யூட்டர், கேமராக்கள் உள்பட நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து