முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு நாட்டு உறவுகள் குறித்து கயனா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      உலகம்
Modi 2024-11-18

Source: provided

பிரேசிலா : பிரேசில் பயணத்தை முடித்து கயானா சென்றடைந்த  பிரதமர் நரேந்தி மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, இந்தியா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்திய பிரதமர் மோடி ஜி0 மாநாட்டில் பங்கேற்றார்.

முன்னதாக, நைஜீரியா சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். அதன்பின்னர் நைஜீரிய பயணத்தை முடித்து பிரேசில் சென்ற பிரதமர் மோடி ஜி20 மாநாட்டில் பங்கேற்றார்.

இந்நிலையில், பிரேசில் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி கயானா புறப்பட்டு சென்றார். கயானா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்த பயணத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்குப்பின் கயானா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து