முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம்: தென் தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      தமிழகம்
India-Meteorological 2022

Source: provided

சென்னை : தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தென் தமிழகத்திற்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கீழடுக்கு சுழற்சி... 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு... 

இதன் காரணமாக வருகிற 23-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆரஞ்சு எச்சரிக்கை....

இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர், நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை....

இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தென் தமிழகத்தில் மிக அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர், நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக அதிகனமழை பெய்யும் என எதிர்க்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து