முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      தமிழகம்
Stelin 2022 02 23

சென்னை, பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 14 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடற்படையினரால்... 

இது குறித்து அந்த கடிதத்தில்  கூறப்பட்டுள்ளதாவது., தமிழகத்தை சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற போது 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தப்படுகிறது. 

7 தமிழக மீனவர்கள்...

14 இந்திய மீனவர்கள் (7 மீனவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்) குஜராத்தின் போர்பந்தரில் இருந்து  இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றபோது 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு ஏறக்குறைய 10 மாதங்கள் முடிவடைந்துள்ளன.  இந்த நிலையில், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தோ எவ்விதத் தகவலும் இல்லை.  மேலும், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.  

மனவேதனையுடன்... 

பொருளீட்டும் மீனவர்கள் இல்லாததால் அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர். பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து