முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு அனுமதி மறுப்பு

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      விளையாட்டு
India-Pak 2024-05-08

Source: provided

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி பஞ்சாப் மாநிலம் வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்தது.ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. 

ஏற்கனவே ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் பயணிப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி விலகினாலும் பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

________________________________________________________________________

தென் ஆப்பிரிக்க வீரருக்கு அபராதம் 

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4வது டி20 போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு தெரிவித்ததற்காக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜிக்கு ஐ.சி.சி கண்டனம் தெரிவித்ததோடு, அபாராதமும் விதித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 4வது போட்டியில் தென் ஆப்பிரிக்க பவுலர் ஜெரால்ட் கோட்ஜி 3 ஓவர்கள் பந்துவீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஆட்டத்தின் 15 ஓவரில் ஜெரால்ட் கோட்ஜி வீசிய பந்துக்கு நடுவர் 'வைட்' என்று கூறியுள்ளார். இதற்கு கோட்ஜி நடுவரிடம் எதிர்ப்பு தெரிவித்து முறையிட்டதாக கூறப்படுகிறது. சர்வதேச போட்டியின் போது நடுவர்களின் முடிவில் கருத்து வேறுபாடு கூறுவது தொடர்பான ஐ.சி.சி நடத்தை விதி 2.8 ஐ கோட்ஜி மீறியது கண்டறியப்பட்டு அவருக்கு இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. 24 வயதான ஜெரால்ட் கோட்ஜி, அவர் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதால் போட்டிக் கட்டணத்தில் இருந்து அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

________________________________________________________________________

பெருவை வீழ்த்திய அர்ஜென்டினா

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்றன. 

இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா - பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் - உருகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதேபோல் பொலிவியா - பராகுவே ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து