முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீப்பிடித்து எரிந்த ரஷிய விமானம்: 95 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      உலகம்
Flight

Source: provided

 

இஸ்தான்புல்: தரையிறங்கியபோது தீப்பிடித்து எரிந்த ரஷிய விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ரஷியாவின் ரிசார்ட் நகரமான சோச்சியில் இருந்து துருக்கியின் அந்தாலியா விமான நிலையத்திற்கு அஜிமுத் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் வந்தது. சுகோய் சூப்பர்ஜெட் 100 வகையை சேர்ந்த அந்த விமானத்தில் 89 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணித்தனர். விமானம் அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர். விமானம் தரையிறங்கியதும் விமானி அவசர அழைப்பு கொடுக்க, விமான நிலைய மீட்புக்குழு, தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி என்ஜினை குளிர்வித்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து