முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அளவில் ஊராட்சிகளில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முதலிடம்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      தமிழகம்
TN 2024-12-2

Source: provided

சென்னை: தேசிய அளவில் ஊராட்சிகளில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறித்து இந்திய பொது நிர்வாக நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கையை மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் டெல்லியில் வெளியிட்டார். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியலமைப்பு அதிகாரங்களை நிறைவேற்றுவதற்கு ஊராட்சி அமைப்புகள் எந்தளவு பங்காற்றி உள்ளன என மாநில அரசு தமது கட்டுப்பாட்டில் உள்ள வளங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு சரியாக பகிர்ந்தளிப்பதில் எவ்வளவு செயல்திறனை உடையதாக உள்ளது என இந்நிறுவனம் மதிப்பீடு செய்தது.

கட்டமைப்பு, செயல்பாடுகள், நிதி, பிரதிநிதிகள், திறன் மேம்பாடு, பொறுப்புடைமை ஆகிய குறியீட்டை அடிப்படையாக கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி, ஊராட்சிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை செயல்படுத்தும் விதத்திலும் அதிகாரப் பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

ஒட்டுமொத்த குறியீட்டின்படி தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. திறன் மேம்பாடு, செயல்பாடுகள் ஆகியவற்றில் 2-வது இடத்தையும், நிதி பரிவர்த்தனையில் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், ஊரக திட்டங்களில் தமிழக ஊராட்சிகளின் ஈடுபாடு மிக உயர்ந்த தரத்தில் உள்ளது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

ஊரக உள்ளாட்சியில் பொறுப்பு வகிக்கும் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சியை நடத்துவதிலும் மாநிலம் சிறந்து விளங்குகிறது எனவும் 'பயிற்சி நிறுவனங்களின்' குறியீட்டில் மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து