முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: பயிற்சியின் போது ரிஷப் பண்ட் காயம்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியின் போது பந்து தாக்கியதில் இந்திய வீரர்  ரிஷப் பண்ட் காயம் அடைந்தார்.

சாம்பியன்ஸ் கோப்பை... 

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படுகிறது. நாளை  (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியினர் நேற்று முன்தினம் துபாய் புறப்பட்டு சென்று அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரிஷப் பண்ட் காயம்...

இந்நிலையில் இந்த பயிற்சியின்போது இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து மைதானத்தில் நின்று கொண்டிருந்த அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டின் காலில் வேகமாக தாக்கியது. இதனால் அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து வலியால் துடித்தார்.

மீண்டும் பயிற்சியில்...

இதனையடுத்து சக வீரர்கள் மற்றும் மருத்துவ குழு விரைந்து வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஓய்வறைக்கு அழைத்து சென்றனர். அரை மணி நேரம் கழித்து மீண்டு வந்த பண்ட் பயிற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அவர் நடக்க சற்று சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. காயத்தின் முழுமையான தன்மை குறித்து விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து