முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 9-ல் தெப்போற்சவம் ஆரம்பம்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      இந்தியா
Tirupati-2023-05-01

Source: provided

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 9-ல் தெப்போற்சவம் ஆரம்பமாகிறது. தெப்போற்சவம் நடைபெறுவதால் கோவிலில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெப்போற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் மார்ச் 9ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. தெப்போற்சவம் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது. முதல் நாளான 9-ம் தேதி சுவாமி புஷ்கரணியில் (தெப்பக்குளம்) உள்ள அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

10-ம் தேதி ருக்மினி, ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 11-ம் தேதி உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

12-ம் தேதி உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 5-வது நாளான 13-ம் தேதி உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் 11, 12 மற்றும் 13-ம் தேதிகளில் ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து