எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி, நமது ராணுவ தளவாட ஏற்றுமதி, 10 ஆண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும் தற்போது 30 மடங்கு அதிகரித்துள்ளது என்று வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அவர் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது,
இந்த கல்லுாரியில், 26 நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பெண் அதிகாரிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். வரும் காலங்களில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நமது எல்லைகளை பாதுகாக்க அரும்பணியாற்றும் ராணுவத்தினரின் சேவையை எண்ணி, நாடு பெருமை கொள்கிறது.
தேசத்துக்கு முன்னுரிமை அளித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணியாற்றுகின்றனர். தேசம் காக்கும் பணிக்கு அவர்களை அனுப்பி வைத்த வீரர்களின் குடும்பத்தாருடைய நாட்டுப்பற்றையும் நான் பாராட்டுகிறேன். இன்று இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது.
உலகமே அதை அங்கீகரிக்கிறது. ஆத்மநிர்பர் பாரத் என்ற அடிப்படையில், இந்தியா எதிர்கால சவால்களை சமாளிக்கும் நோக்கில், பல்வேறு தளவாடங்களை சொந்தமாக தயாரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், நமது பாதுகாப்பு தொழில் துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை தயாரித்து வழங்குவதில், டி.ஆர்.டி.ஓ., புதிய உச்சங்களை தொட்டுள்ளது. தற்போது இந்தியா, 100 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும் 30 மடங்கு ராணுவ தளவாட ஏற்றுமதி இப்போது அதிகரித்துள்ளது.
வேகமாக மாறி வரும் புவி அரசியலில், எந்த சூழ்நிலையையும் சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். புவி அரசியல் சூழல் மாற்றம், பாதுகாப்பு தேவைகளையும் மாற்றி வருகிறது. தேசிய, சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்த புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
இணையத்தில் நடக்கும் போர், பயங்கரவாதம், காலநிலை மாற்றம் குறித்த சவால்களை சமாளிப்பதற்கும் நாம் தயாராக வேண்டும். அந்த வகையில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.
முன்னதாக, அவரை ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டண்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டண்ட் சுனில் குமார் யாதவ் ஆகியோர் வரவேற்றனர். அவர் ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
பின்னர் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் உள்ள போர் நினைவுத்தூணில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் நீலகிரி பழங்குடியின மக்களை, ராஜ்பவனில் இன்று ஜனாதிபதி சந்திக்க உள்ளார். நாளை 30-ம் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 day ago |
-
புயல் எச்சரிக்கையால் ஜனாதிபதியின் திருவாரூர் பயணம் ரத்து
30 Nov 2024திருவாரூர் : மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதி திரெளபதி முர்முவின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-11-2024.
30 Nov 2024 -
7 மாவட்டங்களில் இன்று 500 மருத்துவ முகாம்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
30 Nov 2024சென்னை : தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
4 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு: மழை நிவாரண நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் : அமைச்சர்கள், கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
30 Nov 2024சென்னை : திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுடன் ஆய்வு நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், மழை நிவாரண நட
-
மகராஷ்டிரா: முக்கிய இலாகாக்களை ஒதுக்கக்கோரி பா.ஜ.க.வுக்கு ஷிண்டே தரப்பு திடீர் நிபந்தனை: வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தகவல்
30 Nov 2024மும்பை, முக்கிய இலாகாக்களை தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே திடீர் நிபந்தனை விதித்துள்ளார்.
-
சென்னையில் தொடரும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
30 Nov 2024சென்னை, தொடரும் கனமழையை அடுத்து எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.
-
புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை: மக்கள் இயல்பு வாழக்கை, ரயில், விமான சேவைகள் பாதிப்பு
30 Nov 2024சென்னை, பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்ககும் கனமழையால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
முதல் டெஸ்ட் போட்டி: இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி
30 Nov 2024டர்பன் : முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 233 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: குகேஷ்-லிரென் இடையேயான 6-வது சுற்று இன்று நடக்கிறது
30 Nov 2024கோலாலம்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-வது சுற்றைத் தொடர்ந்து 5-வது சுற்றும் டிராவில் முடிவடைந்த நிலையில் இன்று நடைபெறும் 6-வது சுற்றில் குகேஷ்-லிரென் பலப்பரீட்சை ந