முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் கனமழை: சென்னையில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

 

சென்னை: சென்னை முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கியதில் வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

 பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான சாலைகள், தெருக்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

அனைத்து பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. காற்று பலமாக வீசியதால் பல பகுதிகளில் அதிகாலையிலேயே மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் வீடுகள் இருளில் மூழ்கின.

இந்த நிலையில் சென்னை முத்தியால்பேட்டையில் ஏ.டி.எம். அருகே இரும்புக் கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்த சந்தன் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து