முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 5-வது நாளாக அதிகரிப்பு: ரூ.58 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் அதிகரித்துள்ளது தங்கம் விலை. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,320 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை வார தொடக்கம் முதலே உயா்ந்த வண்ணம் உள்ளது. நவ.18-ஆம் தேதி பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,960-க்கும், நவ.19-இல் பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.56,520-க்கும், நவ.20 ஆம் தேதி பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.56,920-க்கும், நவ.21 ஆம் தேதி பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.57,160-க்கும், விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 57,800-க்கும், கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 7,225-க்கும் விற்பனையானது. கடந்த 5 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 320 உயா்ந்துள்ளது. வெள்ளி விலை தொடர்ந்து 4-ஆவது நாளாக எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.101-க்கும், கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையானது. போர் பதற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்து வருகிறது. டிசம்பர் இறுதிக்குள் பவுன் ரூ.60 ஆயிரத்தை தொடக்கூடும் என தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து