முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஜே.சூர்யாவுக்கு டாக்டர் பட்டம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      சினிமா
SJ-Surya 2024-12-02

Source: provided

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 15வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா கலந்து கொண்டு நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். 

எஸ்.ஜே. சூர்யா தற்போது ஷங்கர் - ராம் சரண் கூட்டணியின் கேம் சேஞ்சர், ஷங்கர் - கமலின் கூட்டணியில் இந்தியன் 3, விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’, விக்ரம் - அருண்குமாரின் ‘வீர தீர சூரன்’, கார்த்தி - பி.எஸ்.மித்ரனின் ‘சர்தார் 2’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். இதையடுத்து கில்லர் என்ற தலைப்பில் அவர் விரைவில் ஒரு படம் இயக்கவுள்ளார்.

சமீப காலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து பிஸியான நடிகராக வலம் வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. குறிப்பாக வில்லனாக இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக சூர்யாவின் சனிக்கிழமை என்ற நானியின் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழில் தனுஷின் ராயன் படத்தில் நடித்திருந்தார். 

எஸ்.ஜே.சூர்யாவுடன் பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர். புல்லேலா கோபிசந்த் மற்றும் தொழில் முனைவோர் சிகே. குமரவேல் ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து