முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரத்தில் மழை பாதிப்பு குறித்து முதல்வர் நேரில் ஆய்வு

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      தமிழகம்
CM-stalin 2024-12-02

Source: provided

 

விழுப்புரம்: விழுப்புரத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை

வழங்கினார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும், அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று (திங்கட்கிழமை) காலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தார். 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மண்டவாய் புதுக்குப்பம் பகுதியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படக் காட்சியினை பார்வையிட்டு, விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் முதல்வர் ஸ்டாலின் விவரங்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பகுதியில் ஃபெஞ்சல் புயலால் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைத்திடும் பணிகளை அவர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விழுப்புரம் கிழக்கு, வி.வி.ஏ. மஹாலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வேட்டி, சேலை, உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து