முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      தமிழகம்
Tamilnadu-Assemble 2024-12-02

Source: provided

 

சென்னை; மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி பகுதியில், டங்ஸ்டன் சுரங்க பணி மேற்கொள்வதற்கான குத்தகை, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, 'ஹிந்துஸ்தான் ஜிங்க்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணியால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளே டங்ஸ்டன் சுரங்க உரிமையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. மாநில அரசின் அனுமதி இன்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து