முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரிக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      தமிழகம்
Stalin   2024-12-02

Source: provided

சென்னை: மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரிக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'ஃபெஞ்சல்' என்ற பெயருடன் வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் கடந்த 3 நாட்களுக்கு முன் நுழைந்தது. இதன்படி அன்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய 'ஃபெஞ்சல்' புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே நேற்று முன்தினம் இரவில் இருந்து 'ஃபெஞ்சல்' புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் 'ஃபெஞ்சல்' புயல் நிலப்பகுதியில் கரையேறியும் வலு குறையாமல் புதுச்சேரியில் நகராமல் நின்று புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் மழையை கொட்டித் தீர்த்தது. அதன்பின்னர், நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு பிறகு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின்னர் இரவுக்குள் தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்த சூழலில் அதி கனமழை பாதிப்புக்குள்ளான கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்து கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மேலும், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து