முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி..?

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      இந்தியா
Maharastra          2024-12-02

Source: provided

 

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 288 தொகுதிகளில் சுமார் 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்னதாக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். பா.ஜ.க.-வின் தேவேந்திர பட்நாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக இருந்தனர்.

தற்போது பா.ஜ.க. தனித்து 130 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது. இதனால் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வராக வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதுதான் வெற்றிக்கு காரணம். இதனால் அவர்தான் முதல்வரான நீடிக்க வேண்டும் என சிவசேனா காட்சி தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் பீகார் மாடலில் (பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையிலும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்) ஆட்சியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால் முதல்வர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் பட்நாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் பா.ஜ.க. தேர்வு செய்யும் முதல்வருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். அதேபோல் பா.ஜ.க. யாரை முதல்வராக அறிவித்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தையின் முடிவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து