முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வேளாண்துறை அமைச்சர் ஆய்வு

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      தமிழகம்
Kadalur 2024-12-02

Source: provided

 

கடலூர்: கடலூர் தென் பண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர் முத்தையா நகர் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருக்கும் பொழுது , காணொளி காட்சி மூலம் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1, 70,000 கன அடி, சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடலூர் பகுதி தென் பெண்ணை யாற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்ஆற்றின் கரையோரத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சி தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (டிச.2) காலை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தென்பெண்ணை ஆற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ள ஆல்பேட்டை அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர், திடீர் குப்பம் பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் முத்தையா நகர் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருக்கும் பொழுது, காணொளி காட்சி மூலம் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெள்ள மீட்பு பணி நடவடிக்கையை செய்திட அறிவுறுத்தினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து