முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதிப்பு: தமிழகத்தில் நிவாரண உதவிகளை மேற்கொள்ள தொண்டர்களுக்கு ராகுல் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      இந்தியா
rahul 2024-12-03

Source: provided

புது டெல்லி:பெஞ்சல் புயல் பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். 

 பெஞ்சல் புயலால் புதுச்சேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் நிவாரண உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

பெஞ்சல் புயலால் தமிழகத்தில்  ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்தேன். புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தங்களின் உடைமைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.  

மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், முடிந்தவரை நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து