முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

55 ஆண்டுகளில் இல்லாத அளவில் தெலங்கானாவில் 5.3 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      இந்தியா
Earthquake 2024-01-02

Source: provided

ஐதராபாத் : தெலங்கானாவில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது கடந்த 55 ஆண்டுகளில் அப்பகுதியில் 5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய நிலநடுக்கமாகும்.

தேசிய நிலஅதிர்வு மையத்தின்படி, தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் உள்ள மேடாரம் மையப்பகுதியில் நேற்று காலை 7.27 மணியளவில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்னதாக கடந்த 1969 ஏப்ரலில் பத்ராசலத்தை மையமாகக் கொண்ட பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இரண்டு நிலநடுக்கங்களும் கோதாவரி பிளவு பள்ளத்தாக்குடன் இணைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது தெலங்கானா, ஆந்திரம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் உணரப்பட்டது. ஐதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் 36.49 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், கிழக்கே 71.27 டிகிரி தீர்க்க ரேகையிலும், 165 கி.மீ ஆழத்திலிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். நிலநடுக்கத்தால் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. 1969 பத்ராசலம் நிலநடுக்கத்தைப் போலவே, இந்த நிலநடுக்கமும் கோதாவரி பள்ளத்தாக்கு மண்டலத்திற்குக் காரணம். குறைந்த தீவிரம் கொண்ட நில அதிர்வு மண்டலம் என வகைப்படுத்தப்பட்டுள்ள நில அதிர்வு மண்டலம் II-க்குள் தெலங்கானா வருவதால், பீதியடையத் தேவையில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து