முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் மூன்றாம் பாலினத்தவர் 44 பேருக்கு போக்குவரத்து உதவியாளர் பணி

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      இந்தியா
Telangana-2024-12-05

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், மூன்றாம் பாலினத்தவர் 44 பேர் போக்குவரத்து உதவியாளராக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஐதராபாத் போக்குவரத்து காவல் துறையில் மூன்றாம் பாலினத்தவர்களை போக்குவரத்து உதவியாளர்களாக நியமிக்க முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டிருந்தார். 

விண்ணப்பதாரர்களுக்கு 18 வயதுக்கு மேல், 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தகுதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கோஷாமஹால் போலீஸ் மைதானத்தில் ஆள்சேர்ப்பு நடத்தப்பட்டது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற உடற்தகுதி போட்டிகளில் மூன்றாம் பாலினத்தவர் 58 பேர் கலந்து கொண்டனர். 

இதில், 44 பேர் போக்குவரத்து உதவியாளராக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 44 பேரில், 29 பேர் திருநங்கைகள், மீதமுள்ள 15 பேர் திருநம்பிகள் ஆவர்.  ஆள்சேர்ப்பு நிகழ்ச்சியில் ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் கலந்து கொண்டார். 

தேர்ந்தெடுக்கப்பட்டோர் தங்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். காவல் துறைக்கு நல்ல பெயரை கொண்டு வர வேண்டும் என போலீஸ் கமிஷனர் சி.வி. ஆனந்த் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து