முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை தாண்டியதாக புகார்: 14 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      உலகம்
Fairman 2023 06 13

கொழும்பு, தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளைக் கைப்பற்றி அதிலிருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப் படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று முன்தினம்(வியாழக் கிழமை) அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரிட்டோ, மெஜோ ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

தொடர்ந்து இரண்டு படகுகளிலிருந்து ரிபாக்சன், ராஜ பிரபு, அரவிந்த் , ராபின்ஸ்டன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்ரிக் நாதன், யோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 மீனவர்கள் கைது செய்யய்பட்டு இலங்கை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 67 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து 529 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து