முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. - சி59 ராக்கெட்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      இந்தியா
PSLV-2024-12-05

சென்னை,  ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா - 3 செயற்கைக்கோள்களுடன், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.- சி59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கைக்கோள் மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோளையும் விண்ணில் நிறுத்தி வருகிறது. அதன்படி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய புரோபா - 3 பெயரில் இரு சிறிய செயற்கைக் கோள்களை வடிவமைத்துள்ளது. 

அவற்றின் எடை, 550 கிலோ. இந்த செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் நேற்று முன்தினம் மாலை, 4:08 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. இதற்கான, 25 மணி நேர கவுன்ட் டவுன் கடந்த 3-ம் தேதி மாலை, 3:08 மணிக்கு துவங்கியது. 

நேற்று முன்தினம் ராக்கெட் ஏவும் பணி, இறுதி கட்டத்தை எட்டியது. திடீரென மாலை, 3:10 மணிக்கு, ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இன்று(நேற்று) மாலை, 4:12 மணிக்கு ஏவப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது. சில மணி நேரங்களுக்கு பின், புரோபா 3 செயற்கைக் கோள்களை சுமந்து, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட், இன்று(நேற்று) மாலை, 4:04 மணிக்கு ஏவப்படும் என, இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

இதன்படி, சரியாக மாலை 4:04 மணிக்கு புரோபா 3 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.,-சி59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 ஐரோப்பிய யூனியனின் செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி, பி.எஸ்.எல்.வி.-சி59/ புரோபா 3 திட்டம், ஏவுதலுக்கான நோக்கத்தை நிறைவேற்றி உள்ளது.  இந்தியாவின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட், இஸ்ரோ, ஐரோப்பிய யூனியனின் விண்வெளி நிலையம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நோக்கங்களுக்கு சான்றாக பி.எஸ்.எல்.வி.,யின் செயல்திறன் அமைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து