முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட் போட்டி:இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் அடிலெய்டில் இன்று பலப்பரீட்சை

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      விளையாட்டு
5-Ram-50

Source: provided

அடிலெய்டு: முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிக்கு திரும்பி உள்ள நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள்

மோதும் 2-வது டெஸ்ட் போட்டி  அடிலெய்டில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றிப்பெற்று இந்திய அணி முன்னிலை பெறுமா என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

சுற்றுப்பயணம்...

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி (பிங்க் பால் டெஸ்ட்) இன்று தொடங்குகிறது. பகல்-இரவு ஆட்டமாக இந்த ஆட்டம் நடைபெறுகிறது. 

கேப்டன் ரோகித்...

இந்த போட்டியில் வென்று வெற்றி பயணத்தை தொடர் இந்திய அணி தீவிரம் காட்டும் . முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா  இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். இது இந்திய அணிக்கு கூடுதல் பலம் ஆகும். அதே நேரத்தில் பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இன்றைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தொடக்க ஜோடி அறிவிப்பு

2-வது போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு:- "கே.எல். ராகுல் இன்னிங்சை தொடங்குவார். நான் மிடில் ஆர்டரில் களமிறங்குவேன். நாங்கள் வெற்றிகரமான முடிவுகளை பெற விரும்புவதால் பேட்டிங்கில் நான் கீழே களமிறங்கும் தெளிவான முடிவுடன் வந்துள்ளேன். முதல் போட்டியில் அவர்கள் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்தார்கள். எனவே அந்த ஜோடியில் மாற்றத்தை நான் பார்க்க விரும்பவில்லை. வெளியே இருந்து பார்க்கும் போதும் அது மாற்ற வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. மிடில் ஆர்டரில் விளையாடுவது தனிப்பட்ட முறையில் அது எனக்கு எளிதல்ல. ஆனால் அணிக்கு அது நன்றாக இருக்கும்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து